நாட்டை அதிரவிட்ட உ.பி. கொடூரம் - அரசு ஹாஸ்பிடலில் 10 பச்சிளம் குழந்தைகள் ஒரே நேரத்தில் மரணம்

Update: 2024-11-16 03:10 GMT

ஜான்சி நகரில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவில் நேற்றிரவு 10 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மண்டலத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டதும், மருத்துவர்களும், செவிலியர்களும் அங்கிருந்த நோயாளிகளை காப்பாற்றி பத்திரமாக வெளியேற்றினர். தகவல் கிடைத்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அங்கிருந்த 54 குழந்தைகளில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்ட நிலையில், 10 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சிகிச்சை பிரிவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து 12 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கும், ஆணையருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்