கூகுளுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவு!

கூகுள் நிறுவனம், இணையதள செய்தி வெளியிட்டாளர்களுக்கு விளம்பர வருவாயை சரியாக பகிர்வதில்லை என்ற புகார்கள் குறித்து, இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-26 02:26 GMT
இந்திய செய்தி நிறுவனங்கள் பெரும் செலவில் செய்தியை சேகரித்து இணையதளங்களில் வெளியிடுகின்றன.  ஆனால் இந்த செய்திகள் வாயிலாக வருவாய் ஈட்டும் கூகுள் நிறுவனம், அதனை செய்தி நிறுவனங்களுக்கு சரியாக பகிர்வதில்லை என, இந்திய செய்தி நிறுவனங்களின் பிரதிநிதித்துவ அமைப்பான இந்திய செய்தித்தாள் கழகம் புகார் தெரிவித்தது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் என சட்டம் இயற்றியிருப்பதை சுட்டிக்காட்டியது.
 
தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், விளம்பர வருவாய் பகிர்வில் செய்தி நிறுவனங்கள் மொத்தமாக இருளில் வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியது. இந்த புகார்களை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், போட்டி சட்டம் 2002-யின் கீழ் கூகுளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததும், 
விரிவான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது என ஐ.என்.எஸ். தெரிவித்துள்ளது. 

செய்தி நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் விளம்பர வருவாயை கூகுள் பகிர வேண்டும் எனவும், 
இதற்கான நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் இந்திய செய்தித்தாள் கழகம் வலியுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்