மத்திய அரசு அறிவிப்பு

Update: 2024-09-30 07:26 GMT

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சினிமாவுக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாகவும், அக்டோபர் 8ம் தேதி, 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்