"10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்" - நடிகர் விநாயகத்தின் பேச்சால் சர்ச்சை

தமிழில் வெளியான திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விநாயகன். இவர் மலையாள மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Update: 2022-03-24 13:23 GMT
தமிழில் வெளியான திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விநாயகன். இவர் மலையாள மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கேரளாவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, மீ டூ இயக்கம் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு பிடித்த பெண்களை தனக்கு இணங்குமாறு அழைப்பேன் என்றும், இதுவரை 10 க்கும் மேற்பட்டபெண்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளதாக தெரிவித்தார். இதை நேரடியாகவே அந்த பெண்களிடம் கேட்பேன் என்றும், அவர்கள் பிடிக்காவிட்டால் நோ என்று சொல்வார்களே தவிர, மீ டூ என கொந்தளித்து பேசியதில்லை என பேசியிருக்கிறார். இவர் ஏற்கனவே பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசி கடந்த 2019ல் கைதான நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கேரளாவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்