மது போதையில் நந்தி மலை செங்குத்தான பாறையில் விழுந்த இளைஞர் - ஹெலிகாப்டரில் மீட்ட கமாண்டோ

பெங்களூரு நந்தி மலையில் செங்குத்தான பாறையில் மது போதையில் விழுந்த பொறியியல் மாணவர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-02-20 19:55 GMT
பெங்களூரு நந்தி மலையில் செங்குத்தான பாறையில் மது போதையில் விழுந்த பொறியியல் மாணவர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். 

டெல்லியை சேர்ந்த பொறியியல் மாணவர் நிஷாங், வார இறுதிநாள் விடுமுறையை கழிக்க பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள நந்தி மலையை சுற்றி பார்க்க நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மலைப்பகுதியில் மது அருந்திய நிலையில், திடீரென 300 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து செங்குத்தான பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மாணவரை மீட்க போராடினர். எனினும் செங்குத்தான பாறை என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதன்பின் விமானப்படையினரின் உதவி கோரப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. இறுதியில் விமான படை கமாண்டோ ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பாறை இடுக்கில் சிக்கியிருந்த மாணவர் நிஷாங்கை பத்திரமாக மீட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்