காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-06 00:58 GMT
  • சென்னை மெரினா கடற்கரையில் இந்தியா விமானப்படை சார்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சி... காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில் விடிய விடிய ஏற்பாடு...
  • இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்,மத்திய பாதுகாப்புத்துற் அமைச்சர் ராஜ்நாத்சிங்... நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு...
  • பொய்களையும், அவதூறுகளையும் உண்மையென நிரூபிக்க போராடி வருகிறது பாஜக... திருச்சி சிவா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.... 
  • சேலம் மாநகரின் மையப்பகுதியில் இளைஞர்கள் போதை மருந்து பயன்படுத்தி மயங்கி கிடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது... போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
  • ஹரியானா சட்டப்பேரவையின் 90 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு... 65 புள்ளி 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்... 
  • அரியானா, காஷ்மீரில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்... 
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்... சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக வாக்குறுதி...
  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில், விரைந்து தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.... தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டம்...
  • தமிழ்நாட்டின் தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு, பவன் கல்யாண் தேசிய தலைவர் அல்ல... காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து... 
  • நம்மிடம் உள்ள துணை முதல்வர் சமத்துவம் குறித்து பேசுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு... மற்றொரு துணை முதல்வரோ சனாதனம் குறித்து பேசி வருவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து மறைமுகமாக விமர்சனம்....
  • இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது... மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது... 
  • மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை... மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்பில் இந்திய அணி... 
Tags:    

மேலும் செய்திகள்