சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை திறப்பு - தெலுங்கானா ராஷ்டிர சமிதி-பாஜகவினரிடையே மோதல்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை திறப்பது தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பாஜகவினரிடையே மோதல் வெடித்தது.

Update: 2022-02-20 08:49 GMT
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை திறப்பது தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பாஜகவினரிடையே மோதல் வெடித்தது. பாஜக நிர்வாகி ஒருவரால் நிறுவப்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜியின் சிலை அவரது பிறந்த நாளான நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் அவர்களால் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜக எம்பி வருவதற்குள்ளாகவே, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் சிலையைத் திறந்து வைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் காவலர்கள் இருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்