"இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Update: 2020-08-10 10:35 GMT
இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய கோரி 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, யுஜிசியின் வழிகாட்டுதலுக்கு மாறாக மகாராஷ்டிராவும், டெல்லியும் தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.  தேர்வுகளை ரத்து செய்துவிட்டு பட்டங்களை வழங்கவேண்டுமென மாநிலங்கள் யுஜிசியை  எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் வினவினார். அப்போது நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டம், யுஜிசி வழிகாட்டுதல்களை கட்டுப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்