நகை கொள்ளை வழக்கில் ஜாமீனில் வந்தவர் சுட்டுக்கொலை - மர்மக் கும்பலை தேடுகிறது போலீஸ்
கேரள மாநிலம் நகை கடை கொள்ளை வழக்கில் கைதாகி சிறையிலிருந்து திரும்பிய தஸ்லீம் என்பவர் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் காசர்கோடில் நகை கடை கொள்ளை வழக்கில் கைதாகி சிறையிலிருந்து திரும்பிய தஸ்லீம் என்பவர் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவர் ரா மற்றும் இன்டர்போல் ஒற்றர் என கூறி வலம் வந்த இவர் பல வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். நகை கொள்ளை வழக்கில், கடந்த 31 ஆம் தேதி ஜாமீனில் விடுதலையான தஸ்லீமை, மர்மக்கும்பல், கடத்தி சென்றது. இதையறிந்த போலீசார் அந்த கும்பலை தேடி வந்த நிலையில், அக்கும்பல் தஸ்லீமை கேரள கர்நாடக எல்லை பகுதியில் சுட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.