அதானி விவகாரம்.. நாடாளுமன்றத்தில் அனல் பறக்க பேசிய ராகுல் காந்தி | Rahul Gandhi

Update: 2024-11-27 12:12 GMT

சிறையில் இருக்க வேண்டிய கெளதம் அதானியை அரசு பாதுகாப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியிடம், அதானி மீதான குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, அதானி குற்றச்சாட்டுகளை ஏற்கப் போகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதுடன், நிச்சயமாக அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கப் போவதாக குறிப்பிட்டார். அதானியை கைது செய்ய வேண்டும் என்பது தான் முக்கிய விஷயம் என தெரிவித்த ராகுல் காந்தி, நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவதாக விமர்சித்தார். ஆனால் ஜென்டில்மேன் கௌதம் அதானி அமெரிக்காவில் பல ஆயிரம் கோடிக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்... அவர் சிறையில் இருக்க வேண்டும்... ஆனால் அவரை அரசு பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்