"நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க. வியூகம்"
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அடுத்த 10 நாட்களும் தீவிரப் பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதன்படி,
எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தவும், 250-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பை நாடு முழுவதும் நடத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது. இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு சந்தித்த பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.