'எப்படியெல்லாம் சாவு வருது..' ஒரே நேரத்தில் பிரிந்த மாமா, மச்சான் உயிர்
'எப்படியெல்லாம் சாவு வருது..' ஒரே நேரத்தில் பிரிந்த மாமா, மச்சான் உயிர்
கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாமாவும் மைத்துநரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... கல் சிறு நாகலூரைச் சேர்ந்த ஏழுமலை தனது மைத்துநரான ராஜ்குமாருடன் எலவனாசூர் கோட்டை புறவழிச் சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பைக்கில் சென்ற போது எதிரே அதி வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஏழுமலையும் ராஜ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய எலவனாசூர் கோட்டையை சேர்ந்த கங்காதரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.