நடுரோட்டில் சரக்கடித்த கும்பல்.. தட்டிக் கேட்டவருக்கு அடுத்தநொடி நேர்ந்த பயங்கரம்
நடுரோட்டில் சரக்கடித்த கும்பல்.. தட்டிக் கேட்டவருக்கு அடுத்தநொடி நேர்ந்த பயங்கரம்
கடலூரில் சாலையில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவருக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனகிரி அருகே பு.உடையூர் கிராம பேருந்து நிறுத்த சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற மஞ்சக் கொல்லையைச் சேர்ந்த செல்லதுரை இதுகுறித்துகேட்டுள்ளார். போதையில் இருந்த அந்த நபர்கள் ஆத்திரமடைந்து செல்லத்துரையை இரும்பு ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். போலீசார் விரைந்து வந்து செல்லதுரையை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற போது, தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செல்லதுரை ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.