புதுவை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
பணி ஓய்வு நாளில் புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி ஓய்வு நாளில் புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணைநிலை ஆளுநரும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியுமான கிரண்பேடி உத்தரவுப்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச்செயலர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். மத்திய சிவில் சர்வீஸ் விதிகளையும், அதிகாரத்தையும் ரங்கநாதன் மீறி செயல்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முன் அனுமதி பெறாமல் தலைமையகத்திலிருந்து அவர் வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.