மும்பை லால்பாக் ராஜா விநாயகர் தரிசனம் : முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பங்கேற்பு

மும்பையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில், லால்பாக் ராஜா' விநாயகர் சிலை பிரசித்து பெற்றது.

Update: 2019-09-09 01:49 GMT
மும்பையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில், லால்பாக் ராஜா' விநாயகர் சிலை பிரசித்து பெற்றது. 1934-ஆம் ஆண்டு முதல் லால்பாக் ராஜா விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது. சுமார் 10 நாட்கள் மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்துவிட்டு பல லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு செல்வதால் பணக்கார விநாயகர் என லால்பாக் ராஜா அழைக்கப்படுகிறார். தற்போது லால்பாக் ராஜா விநாயகரை ஏராளமானோர் தரிசனம் செய்துவரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் வழிபட்டனர். முகேஷ் அம்மானி குடும்பத்தினரும் லால்பாக் ராஜா விநாயகரை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்