செயின் திருட்டில் ஈடுபட்ட திருடனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் - கைகளை கட்டி போலீசில் ஒப்படைத்தனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனூ மாவட்டத்தில் செயின் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனூ மாவட்டத்தில், செயின் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெண் ஒருவரின் செயினை திருட முயற்சி செய்யும்போது, இந்த நபர் பிடிபட்டுள்ளார். இதையடுத்து திருடனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள், கைகளை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் திருடனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.