விசாகப்பட்டினம் : 4 கிலோ மீட்டர் தூரம் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து சென்ற உறவினர்கள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Update: 2019-07-17 09:08 GMT
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கும்மரவொன்ச்சி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வரும் நிலையில் உரிய சாலை வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் சாலை வசதி இல்லாத நிலையில் அவரது உறவினர்கள் தொட்டில் கட்டி அந்த பெண்ணை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றனர். நீர் வழிப்பாதைகளிலும் அவர்கள் அந்த பெண்ணை தொட்டில் கட்டியே சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்