மத்தியபிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி வீட்டில் சோதனை

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-04-07 06:05 GMT
மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத்திடம் சிறப்பு அதிகாரியாக பணிபுரியும்   பிரவீன் கக்காரின் வீடு இந்தூரில் உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியியிலிருந்து சென்றுள்ள 15 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீடு தவிர பிரவீன் கக்காருக்கு சொந்தமான 6 இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 9 கோடி ரூபாய் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஹவாலா பண விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்