நாடாளுமன்றம் மீண்டும் ஜனவரி 31-ல் கூடுகிறது : வருமான வரி உச்ச வரம்பு உயருமா?
தனி நபர் வருமான உச்சவரம்பு, ஐந்து லட்சம் ரூபாயாக உயருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனி நபர் வருமான உச்சவரம்பு, ஐந்து லட்சம் ரூபாயாக உயருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடர் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.