தடையை மீறி சேவல் காலில் கட்டப்படும் கத்தி

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேவல் போட்டிகள் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2019-01-13 12:51 GMT
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்படும் சேவல் போட்டிகளுக்கு எதிராக ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் சேவல் போட்டிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திராவின் கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் கம்மம், வாரங்கல், மேடக் ஆகிய மாவட்டங்களில் சேவல் போட்டிகளை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தடையை மீறி சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி போட்டி நடத்தவும், சேவல்கள் மீது லட்சக்கணக்கான ரூபாய் பந்தயம் கட்டவும் ஏராளமானோர் ஆர்வமுடன் உள்ளனர். சேவல் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்