எம். ஜி.ஆர். கெட்டப்பில் தெலுங்கு தேசம் எம்பி
ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம்பி நாரமல்லி சிவபிரசாத், எம். ஜி. ஆர். போல வேடமணிந்து வந்து கவனம் ஈர்த்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாரமல்லி சிவபிரசாத், தமிகத்தின் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். போல வேடமணிந்து வந்து கவனம் ஈர்த்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக பல வேடங்களுடன் நாடாளுமன்றத்து வரும் அவர், இதற்கு முன்னர் மேஜிக் மேன், பள்ளிக் குழந்தை, பெண்கள் என பல வேடங்களில் வந்து கவனம் ஈர்த்துள்ளார்.