கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி...விவசாயிகள் பிரமாண்ட பேரணி...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை, எல்லையிலேயே போலீஸார் தடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடிக்க முயன்றதால் பதற்றம் நிலவுகிறது.

Update: 2018-10-02 09:54 GMT
* விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், பேரணியாக டெல்லி நோக்கி புறப்பட்டனர்.   உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களிலும், நடை பயணமாகவும்  சென்றனர். 

* டெல்லியின் தெற்கு பகுதியில் கூடி, போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அவர்களை, போலீஸார் டெல்லி- உத்தரபிரதேச மாநில எல்லையான காசியாபாத் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். 

* சாலை முழுவதும் தடுப்புகளை போட்டும், தண்ணீரை பீய்ச்சியும் அவர்களை 
போலீஸார் விரட்ட முயன்றனர்.  இதையடுத்து, தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீஸார் விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்