"வேளாண் துறையில் வளர்ச்சியை எட்ட இலக்கு" - பிரதமர் நரேந்திர மோடி தகவல்
வேளாண் துறையில் வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் போது பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை நிறைவேற்றி வருவதாக கூறியுள்ளார். மேலும், விவசாய சகோதரர்களின் உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அளவுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெல்லுக்கு இதுவரை இதுபோன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டதில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
A promise fulfilled!
— Narendra Modi (@narendramodi) July 4, 2018
We are honoured and humbled that we had the opportunity to take a decision on the historic increase of MSP, which will further enhance India’s agricultural transformation. https://t.co/yv4Hhn0GP5