ஜூலை 1 முதல் பாரூர் ஏரியில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
ஜூலை 1 முதல் சுழற்சி முறையில் நீர் திறக்க ஆணை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் ஏரியில் இருந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சுழற்சி முறையில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனக் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் 2 ஆயிரத்து 397 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.