160 கிமீ வேகம்...வந்தே பாரத் ஒதுங்கிக்கோ... வந்தாச்சு நமோ பாரத்..! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Update: 2023-10-20 14:45 GMT

நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு நமோ பாரத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில், டெல்லி - காசியாபாத் - மீரட் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் தொடங்கி வைத்தார். 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் என்பதால், பயண நேரம் குறையும். மேலும், சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், டிக்கெட் பெற்று, ரயிலில் பயணம் செய்தார். பின்னர் அங்கிருந்த பெண் பணியாளர்கள், பயணிகள் மற்றும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்