விஜய்தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக பரவும் தகவல்கள் பொய்யானது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் ஒன்றாக டேட்டிங் செல்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இருப்பினும், இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.