அதிக Tax கட்டும் பிரபலங்கள்.. இரண்டாம் இடத்தில் விஜய்.. முதலிடத்தில் யார் தெரியுமா?
Fortune India இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், 92 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். நடிகர் விஜய் 2024ம் ஆண்டு 80 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தி 2வது இடம் பிடித்திருப்பது, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையை பொறுத்தவரை, விராட் கோலி 66 கோடி ரூபாயை வரியாக செலுத்தி முதல் இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி 38 கோடி ரூபாய் வரி செலுத்தி 2வது இடத்திலும் உள்ளனர்...