மலையாள திரையுலகை பரபரக்க செய்த வங்காள நடிகை - இயக்குனர் ரஞ்சித் எடுத்த முடிவு

Update: 2024-08-25 14:17 GMT

தன்னை துன்புறுத்தியதாக வங்காள நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியில் இயக்குனர் ரஞ்சித் ராஜினாமா செய்துள்ளார். வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்காக கேரளா சென்றபோது இயக்குனரான ரஞ்சித் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியான் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்