ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, ரஜினியின் திருவுருவப் படத்திற்கு, அவரது ரசிகர் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், தனது அலுவலகத்தில் பூஜை அறை அமைத்து, அதில் ரஜினியின் புகைப்படங்களை வைத்து தினந்தோறும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, 7 வகை திரவியங்களை கொண்டு, ரஜினி படத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தார்.