"விரைவில் இவன் பிச்சை எடுக்க போகிறான்" - பிரஸ்மீட்டில் பாலா சொன்ன உருக்கமான பதில்

Update: 2024-01-31 03:12 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னா மலை கிராமத்தில் 750 பேர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில், கடந்த அக்டோபர் மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், டோலி கட்டி தூக்கி சென்ற செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். அவரை மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விரைவில் இவன் சிக்னலில் பிச்சை எடுக்கப்போகிறான்" என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நான் பிச்சை எடுக்கும் அதே சிக்னலில் என்னுடைய ஆம்புலன்ஸ் வந்து என்னை காப்பாற்றும் என்று, அந்த பதிவிற்கு பாலா பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்