இயக்குநர் பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார் - என்ன காரணம்?

Update: 2024-08-21 14:25 GMT

வழக்கறிஞர் பொற்கொடி என்பவர், இயக்குநர் பா. ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் புத்த மதத்தை உயர்த்துவதற்காக, வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், இயக்குநர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை தடை செய்யக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்