என் இதயம் வலிமையாக இருக்க என் உயிர் மனைவி... மனம் திறந்து பேசிய நடிகர் ஆதி | Nikki Galrani
சென்னை மெரினா கடற்கரையில், உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300 பேர் இணைந்து இதய வடிவ மனித சங்கிலி அமைத்து இதய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி தம்பதி, பொதுமக்களுடன் இதயம் குறித்து கலந்துரையாடினர்