வாரிசு திரைப்படத்தால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தன்னுடைய பணத்தை தயாரிப்பு தரப்பிலிருந்து பெற்றுத்தருமாறும் நடிகர் விஜய்-க்கு கேரள விநியோகஸ்தர் கடிதம் எழுதியுள்ளார். வாரிசு படத்தின் விநியோக உரிமையை வாங்கிய எர்ணாகுளத்தை சேர்ந்த ராய், படத்திற்கு கூடுதல் முன்பணமாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கவில்லை எனவும், தான் அளித்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இப்பிரச்சனையில் தலையிட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.