மகாராஷ்ட்ர மாநிலத்தில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் நடிகை கஜோல் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். வடமாநிலங்களில் தசரா விழா களைகட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு மும்பை சர்போஜனின் என்ற இடத்தில், துர்கா பூஜைக்கான சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டது. இதில், நடிகை கஜோல் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.