சர்ச்சையில் சிக்கிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனர்...போபால் மக்களை இழிவு படுத்தியதாக புகார்

சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பல மாநிலங்களில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-28 09:07 GMT
சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பல மாநிலங்களில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் இயக்குனராக வளர்ந்துள்ள விவேக் அக்னி ஹோத்ரிக்கு, ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போபாலை சேர்ந்தவர்கள் என்றால் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற கருத்து இருப்பதாகவும், தான் போபாலை சேர்ந்தவன் என்றாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பியதில்லை என்றும் விவேக் அக்னி ஹோத்ரி தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு மத்திய பிரதேச மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், மும்பை, வெர்சோவா காவல் நிலையத்தில் விவேக் அக்னி ஹோத்ரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரோகித் பாண்டே என்பவர் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்