ஒரேயொரு கேள்வியில்.. நேரில் கோலியை அதிரவிட்ட ராதிகா

Update: 2024-09-28 11:11 GMT

அபுதாபியில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ராதிகா, கிரிக்கெட் வீரர் கோலியுடனான சந்திப்பு குறித்த சுவையான தகவலைப் பகிர்ந்து கொண்டார்... இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது விமானத்தில் கோலியை சந்தித்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்த ராதிகா, முதலில் அவர் விராட் கோலியைப் போல் உருவம் கொண்ட வேறு யாரோ என நினைத்ததாகவும், பிறகு அவரே உறுதிகூறிய பின்பு தான், தான் நம்பியதாகவும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அத்துடன் நாங்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள் என விராட்டிடம் நெகிழ்ச்சி தெரிவித்ததாக பூரித்தார் ராதிகா...

Tags:    

மேலும் செய்திகள்