கோலாகலமாக தொடங்கியது 94 ஆவது ஆஸ்கர் விருது விழா - சிவப்பு கம்பள வரவேற்பில் திரைத்துறையினர்

உலகின் மிகப்பெரிய திரைத்துறை விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

Update: 2022-03-28 01:30 GMT
உலகின் மிகப்பெரிய திரைத்துறை விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷனில் விழா நடைபெற்றது. இந்நிலையில், நடப்பாண்டு 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  வழக்கமாக ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஹாலிவுட்டின் டால்பி திரையரங்கிலேயே நடைபெறுகிறது. இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு கம்பள வரவேற்பில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் கண்கவர் உடை அலங்காரங்களுடன் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்