நீங்கள் தேடியது "Gaja Cyclone"
20 Nov 2018 3:24 PM IST
"புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்
கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 Nov 2018 1:49 PM IST
கனமழை காரணமாக புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதல்வர்
கனமழை காரணமாக புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் பழனிசாமி திருச்சி திரும்பினார்.
20 Nov 2018 11:36 AM IST
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 7:17 AM IST
புயல் பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டார் முதலமைச்சர்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர், துணை முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர்.
19 Nov 2018 9:12 PM IST
கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
19 Nov 2018 7:56 PM IST
தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்று கூடுவதா? - பிரேமலதா விஜயகாந்த்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.
19 Nov 2018 7:31 PM IST
புயலால் மின்துறைக்கு ரூ. 1000 கோடி சேதம் - மின் துறை அமைச்சர் தங்கமணி
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலால், மின் துறைக்கு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
19 Nov 2018 7:10 PM IST
ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...
நாகை மாவட்டம், கோவில் பத்து என்ற இடத்தில் விரைவில் திறக்கப்பட இருந்த ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு, கஜா புயலில் முழுமையாக சேதமடைந்துள்ளது.
19 Nov 2018 6:00 PM IST
கஜா புயல் சீரமைப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து செய்திட வேண்டும் - வைகோ
புயலுக்கு முன்பு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல், கஜா புயல் சீரமைப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து செய்திட வேண்டும் என, மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 Nov 2018 5:49 PM IST
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
19 Nov 2018 4:59 PM IST
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
19 Nov 2018 4:36 PM IST
பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?
கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் சிறுமலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது.