கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* முன்னதாக, சென்னை - தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின், மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , கஜா புயல் நிவாரண அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
* மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கப்படும். பாத்திரம் உள்ளிட்டவைகளை கூடுதலாக வாங்க, தலா 3 ஆயிரத்து 800 ரூபாய் வழங்கப்படும்.
* முழுவதும் சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதம் அடைந்த குடிசைகளுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும். தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* முழுவதும் சேதம் அடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு தலா 42 ஆயிரம் ரூபாயும், முழுவதும் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கு தலா 85 ஆயிரம் ரூபாயும், விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
* இதனிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை நாளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு பகுதிகளில் கீழே இறங்கி, மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறவும் முடிவு செய்துள்ளார்
Next Story