கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இன்று விசாரணை
கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் ஜாமினில் உள்ளனர்.
வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில், சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில், 49 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கொடநாடு வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
அப்போது ஜாமினில் உள்ள 10 பேரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், தனிப்படையில் உள்ள அதிகாரிகளிள் பட்டியலும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.