பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன்...அரையிறுதியில் லக்‌ஷ்யா சென் தோல்வி

Update: 2024-08-04 14:18 GMT

ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கைச் சேர்ந்த முன்னணி வீரர் விக்டர் அக்செல்சனுடன் லக்‌ஷ்யா சென் பலப்பரீட்சை நடத்தினார். போட்டியின் முதல் செட்டின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்து லக்‌ஷ்யா சென் முன்னேறினார். விக்டர் அக்செல்சனும் புள்ளிகளைக் குவித்து சவால் அளித்தார். எனினும் கடைசி நேரத்தில் செய்த சிறு தவறுகளால் முதல் செட்டை 20க்கு 22 என்ற கணக்கில் லக்‌ஷ்யா சென் இழந்தார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டிலும் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய சென், பிற்பகுதியில் தடுமாறி 14க்கு 21 என்ற கணக்கில் 2வது செட்டை இழந்தார். நேர் செட்களில் வெற்றி பெற்ற அக்செல்சன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த லக்‌ஷ்யா சென் வெண்கலப் பதக்கத்திற்கானப் போட்டியில் விளையாட உள்ளார்.


பாரிஸ் ஒலிம்பிக் 400 மீட்டர் கலப்புப் பிரிவு தொடர் ஓட்டத்தில் நெதர்லாந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. போல் (bol), ஆமல்லா, கிளெய்ன், கிளாவர் ஆகியோர் அடங்கிய நெதர்லாந்து அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 7 வினாடிகள் 43 மணித்துளிகளில் கடந்து நெதர்லாந்து முதலிடம் பிடித்தது. 2வது இடம் பிடித்த அமெரிக்க அணி வெள்ளிப் பதக்கமும், 3வது இடம் பிடித்த பிரிட்டன் அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.


பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸின் ஹாக்கி மட்டை, இங்கிலாந்து வீரர் முகத்தில் எதிர்பாரத விதமாக பட்டது. இதனையடுத்து அமித் ரோஹிதாஸிற்கு கள நடுவர் ரெட் கார்டு வழங்கினார். இதனால் அவரால் தொடர்ந்து ஆட்டத்தில் விளையாட முடியாமல் போன நிலையில் மீதமுள்ள 10 வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி விளையாடி போட்டியில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்