எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சீனாவின் இந்த சோ யாக்...
அண்மையில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் 2024இன் வைரல் வீடியோக்களில் இவரை பலரும் பார்த்திருக்க கூடும்...
18 வயதேயான இந்த சோ யாக்... ஜிம்னாஸ்டிக் போட்டி மூலம் ஒலிம்பிக்கில் பங்கெடுத்தார்...
தொடர்ந்து தான் பங்கேற்ற பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்...
பதக்க மேடையில் தன் க்யூட் ரியாக்சனால் வைரலான சம்பவம்
ஒலிம்பிக்கில் இளம் வயதினவர்களுக்கான தங்கப்பதக்கத்தை இவர் நூலிழையில் தவற விட்டதும் குறிப்பிடத்தக்கது...
இந்நிலையில்தான், பதக்க மேடையில் இவரின் க்யூட்டானை செயல் ஒன்று வைரலாகி பலரையும் கவர்ந்தது...
இப்படி தன்னுடைய செயலால் பலரையும் கவர்ந்த அன்புக்குரியவளாக வலம் வந்த இந்த சோ யாக்... தற்போது தன்னுடைய மற்றொரு செயலால் பலரது மனதிலும் மரியாதைக்குரியவளாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறாள்...
பெற்றோரின் உணவகத்தில் உணவு சப்ளை செய்யும் வீடியோவும் வைரல்
வெளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய சோ யாக்... வெற்றிக் களிப்பில் இளைப்பாறாமல்.. தன் பெற்றோர் நடத்தி வரும் உணவகத்தில் அவர்களுக்கு உதவியாக வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது...
தொடக்கத்தில் சோ யாக்கின் திறமையை கண்டு பிரமித்த மக்கள், தற்போது இளம் வயதிலே அவர் அடைந்திருக்கும் பக்குவத்தையும், அவரின் உழைப்பையும் கண்டு சிலிர்த்து போயிருக்கின்றனர்...