பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெடித்த சர்ச்சைகள்

Update: 2024-08-12 11:01 GMT

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவின்போதே சர்ச்சைகளும் தொடங்க ஆரம்பித்தன.

ஆம்... தொடக்க விழாவின்போது ஒலிம்பிக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையானது.,

மறுபுறம் அணிவகுப்பின்போது தென் கொரியாவை வட கொரியா என வர்ணனையாளர் குறிப்பிட்டதால் தென் கொரிய அணி அதிர்ச்சி அடைய, ஒலிம்பிக் கமிட்டி பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

இது மட்டுமின்றி தொடக்க விழா நிகழ்ச்சியில் last supper ஓவியம் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் குவிய, இதற்கும் ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு கேட்டது.

ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரைஜ், போதைப் பொருள் வாங்க முயன்றதால் கைது செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. தனது செயலுக்கு கிரைஜ் மன்னிப்பு கோரிய நிலையில், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அவரை அதிரடியாக நீக்கியது.

இதேபோல் விதிகளை மீறி ஒலிம்பிக் கிராமத்தைவிட்டு வெளியே சென்று BOY FRIEND உடன் ஊர் சுற்றிய பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா நீக்கப்பட்டார்.

பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதும், 20 வயதிலேயே அவர் ஓய்வை அறிவித்ததும் விவாதத்திற்கு வித்திட்டது.

டென்னிஸ் மூன்றாம் சுற்றில் தோல்வி அடைந்த கோகோ காஃப், தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் நடுவர் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். கண்ணீர் மல்க அவர் களத்தை விட்டு வெளியேற, நடுவரின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ட்ரோன் மூலம் எதிரணியை உளவு பார்த்ததாக கனடா மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் Priestman-க்கு தடை விதிக்கப்பட்டது, இஸ்ரேல் வீரருக்கு தஜிகிஸ்தான் ஜூடோ வீரர் எமோமாலியின் கைகொடுக்க மறுத்த சம்பவங்களும் அரங்கேறியது.

ஒலிம்பிக் கிராமத்தில் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை.... ஏசி-க்கள் பொருத்தப்படவில்லை போன்ற புகார்களும் கிளம்ப, தங்கம் வென்ற இத்தாலி நீச்சல் வீரர் தாமஸ், பார்க்கில் படுத்து உறங்கிய சம்பவம், போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கடும் விமர்சனத்தைப் பெற்றுத் தந்தன.

Tags:    

மேலும் செய்திகள்