16 வயது தாண்டினால் தான் சோசியல் மீடியா - அதிரடி சட்டம் போட்ட ஆஸ்திரேலிய அரசு | Social Media | Law
ஆஸ்திரேலியா அரசாங்கம் உலகில் முதல் முறையாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது. சமூகவலைதள குறைந்தபட்ச வயது வரம்பு சட்ட மசோதா அந்நாட்டு செனட் சபையில் நிறைவேறியது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சோதனை ஓட்டமாக தடை அமலுக்கு வருகிறது. வயது வரம்பு விஷயத்தில் சட்டத்தை மீறினால் 270 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முதல் டிக்-டாக் வரையில் டெக் நிறுவனங்களுக்கு கடிவாளத்தையும் ஆஸ்திரேலிய அரசு போட்டுள்ளது. சமூக வலைதளங்கள் பயன்பாட்டால் இளைஞர்கள் மனநல பாதிப்பு குறித்த கவலை அதிகரித்து இருக்கும் வேளையில், ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம், அதுபோல சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மற்ற நாட்டு அரசாங்களுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்