இந்தியர்களை பற்றி அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி | India | America
அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது என்றும் நடப்பு ஆண்டில் 11 மாதங்களில் 20 லட்சத்துக்கும் அதிமான இந்தியர்கள் அமெரிக்கா வருகை தந்துள்ளனர் என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 வது ஆண்டாக தற்காலிகமாக அமெரிக்கா வருகை தரும் இந்தியர்கள் 10 லட்சத்திற்கும் அதிமானவர்களுக்கு விஷா வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது அமெரிக்காவில் 3.31 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.