ஜூலை 29 "மழை தினம்"...அட டே - ரெயின் டே...

Update: 2024-07-22 03:11 GMT

அட டேய்ல இன்னைக்கு நாம பாக்கப்போற டே.. நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு டேய்னே சொல்லலாம்… அப்டி என்ன டேயா இருக்கும்னு பாக்குறீங்களா.... அதாவது காரமா இல்ல சூடா சாப்பிட்டா உடனே நம்ம நாக்குக்கு ஜில்லுனு ஒரு ஐஸ் க்ரீம குடுத்து சந்தோசபடுத்துற மாதிரி... சூரியன் நம்ம ஊரையே சுட்டெரிக்குற நேரத்துல் ஜில்லுனு மழை பேஞ்சா எப்டி இருக்கும்… ஊரோட சேந்து மக்களோட மனசும் ஜில்லுனு ஆகிடும்…

அப்டி நம்ம உலகத்தையே சந்தோசப்படுத்துற நம்ம மழைக்கு ஒரு டே கொண்டாடலானா எப்டிங்க...? அதுனால வர 29 ஆம் தேதி உலக மக்கள் எல்லாரும் ஒன்னு சேந்து ரெயின் டேய செலப்ரேட் பன்றாங்களாம்... அதனால நாமளும் இந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனும்... மழைக்குள்ள இருக்க பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....

மழை தினத்தை உருவாக்கிய அமெரிக்கா...

இந்த...உன்னதமான... அற்புதமான... மகத்துவமான டேய... யாரு உருவாக்குனதுனு பாத்தா... அட வழக்கம் போல நம்ம அமெரிக்க காரங்க தான்.... அமெரிக்காவுல இருக்க பென்சில்வேனியா அப்டிங்குற கிராமத்தை சேந்த விவசாயிகள்தான் இந்த National rain day-ய உருவாக்கிருக்காங்களாம்.... அதாவது ஜூலை மாசம் வந்தா போதும், இந்த கிராமமே மழையால செழிப்பா மாறிடுமாம்... நம்ம எல்லாரையும் வாழ வைக்குற மழைக்கு நன்றி சொல்லும் விதமா, நாம ஏன் rain day கொண்டாட கூடாதுனு யோசிச்சு... ஒவ்வொரு வருசமும் ஜுலை மாசம் 29 ஆம் தேதிய ரெயின் டேவா கொண்டாட தொடங்கியிருக்காங்க... அவங்க ஆரம்பிச்சு வைச்சத தான் இப்போ உலக மக்கள் எல்லாரும் National rain dayனு கொண்டாடிட்டு இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்