ரஷ்யா சென்ற ஹமாஸ்... சீனுக்குள் வந்த புதின்..!இஸ்ரேலுக்கு அடுத்த ஷாக்... பதற்றத்தில் அமெரிக்கா..

Update: 2023-10-27 08:53 GMT

ஹமாஸ் குழுவினர் ரஷ்யா சென்றதை அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி விமர்சித்துள்ளார்...

காசாவில் தற்போது பிடித்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய குடிமக்கள் உட்பட வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் குழு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றிருந்தது... இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீனம், ஹமாஸ் குழு உட்பட மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய தரப்புகளுடனும் ரஷ்யா உறவு கொண்டுள்ளது. காசாவில் தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்காதான் காரணம் என மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் ரஷ்யா, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான தீர்வைக் கண்டறியும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் மற்றும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்படும் இஸ்ரேலின் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எடுத்துள்ள முயற்சிகளை ஹமாஸ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் இஸ்ரேலியர்களை தொடர்ந்து கொன்று வரும் ஹமாசை ஆதரிக்க வேண்டிய நேரம் இதுவல்ல என தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்