சீனாவின் Deepseek செயலி கேடு தரக்கூடியது என்றால் அதை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகளை மீறுவதால், Deepseek செயலியை தடை செய்ய, அவசர மனுவாக விசாரிக்க கோரி பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், கேடு தரக்கூடியது என்றால் Deepseek செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.