"ட்ரம்ப் குற்றவாளி.." USஐ அதிர வைத்த தீர்ப்பு கப்பலேறி மானம்... காத்திருக்கும் சிறை கம்பிகள் காது கூச முடிவுரை எழுதிய ஆபாச நடிகை உலுக்கும் `ஸ்டோர்மி' ஆபாச புயல்
ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட முடியாமல் போக வாய்ப்புள்ளதா? என்பது பற்றி அலசலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கோ அல்லது முன்னாள் அதிபருக்கோ குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன்முறை... இதுபோன்ற மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ட்ரம்ப், இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றே கூறி வருகிறார்...
இப்படி ட்ரம்பைப் புலம்ப விட்டவர், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்... "ஸ்டார்"மி டேனியல்ஸ் வடிவில் தன் வாழ்வில் மிகப்பெரிய "ஸ்டார்ம்" வீசுமென்று, நிச்சயம் நினைத்திருக்க மாட்டார் ட்ரம்ப்...
2006ல் ட்ரம்ப் தன்னுடன் உடல் ரீதியான தொடர்பில் இருந்ததாக புயலைக் கிளப்பிய அந்த நடிகை, 2016 தேர்தலின்போது, இதுபற்றி பேசாமல் இருக்க தனக்கு 1 கோடி ரூபாயை தனக்கு வழங்கியதாகவும் குண்டை வீசினார்...
ஆனால், ட்ரம்ப் தேர்தல் நிதியை வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், விவகாரம் பூதாகரமானது... 36 புகார்கள் ட்ரம்ப் மீது கொடுக்கப்பட்ட நிலையில் அனைத்தையுமே திட்டவட்டமாக மறுத்து வந்தார் ட்ரம்ப்...
"ட்ரம்ப்பை நான் நிர்வாணமாகவே பார்த்துள்ளேன்... அவருக்கு எதிராக சாட்சி சொல்ல நான் கொஞ்சம் கூட பயப்படப் போவதில்லை" என பரபரப்பைக் கிளப்பியதோடு, நீதிமன்றம் என்று கூட பார்க்காமல் நீதிபதியின் காதுகள் கூசும் அளவுக்கு ஸ்டார்மி டேனியல்ஸ் கூறிய சாட்சியத்தால், ட்ரம்ப் மானம் கப்பலேறியது...
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய மன்ஹாட்டன் நீதிமன்றம் ட்ரம்ப்பைக் குற்றவாளி என அதிரடி தீர்ப்பை வழங்கியது...
34 வழக்குகளிலும் ட்ரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் "வலிக்காத மாறியே காட்டிக்குவோம்" என்பது போல, கையை உயர்த்திக் காட்டி ஆதரவாளர்களை ஊக்குவித்தார்...
குற்றவாளி என அறிவித்துள்ள நிலையில், ஜூலை 11ம் தேதி அவருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்...
அய்யகோ இப்படி ஆகி விட்டதே...அஸ்தமித்து விடுமோ ட்ரம்பின் அரசியல் வாழ்க்கை என்று யாரும் பதற வேண்டாம்... ஏனென்றால், அவர் சிறைக்கே சென்றாலும் அதிபராகப் பதவியேற்க முடியும்...
வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைவரின் கவனமும் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தான் உள்ளது...
தண்டனை விபரங்களை அறிவித்தாலும், ட்ரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், ட்ரம்ப் சிறை செல்வதற்கான வாய்ப்பு குறைவு. மேலும், இதுபோன்ற விவகாரங்களில் அதிகபட்ச சிறை தண்டனையே 4 ஆண்டுகள் தான்... இது தவிர, இத்தகைய குற்றத்துக்காக சிறைக்கு அனுப்புவது அரிது. அபராதம் விதிக்கப்படவே அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.
குற்றவாளி என தீர்ப்பளித்த போதிலும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித சிக்கலும் இருக்காது. சிறையிலேயே இருந்தாலும் அதிபராகப் பதவியேற்க முடியும். சட்டப்பூர்வமாக அவரது பதவியேற்பையோ, தேர்தலில் போட்டியிடுவதையோ தடுக்க முடியாது...
எப்படிப் பார்த்தாலும் அடுத்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பைடனுக்கு ஒரு வலிமையான வேட்பாளராகவே ட்ரம்ப் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...