`ஹே பிரபு ஹே...’ ஆர்ப்பரித்த மழைநீர்.. திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்.. -ஆனந்த குளியல் போட்ட சிறுவர்கள்

Update: 2023-12-07 12:16 GMT

சென்னை அடுத்த பூந்தமல்லியில் சாலைகளில் ஆர்ப்பரித்து செல்லும் ஏரியின் உபரிநீரில், சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்த பாரிவாக்கம் ஏரி நிரம்பியது. அப்போது, ஏரியின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு உபரிநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உபரி நீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்